Tuesday, 3 January 2012

நோட் பேட் பற்றி நமக்கு தெரியும். ஆனால் பேசுகின்ற நோட்பேட்-Speaking Notepad  பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இன்றைய பதிவில் அதைப்பார்க்கலாம்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண் டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டாக்குமெண்டை திறந்துகொள்ளுங்கள். அல்லது புதிய தாக ஒன்றை தட்டச்சு செய்துகொள்ளுங்கள் இதில் உள்ள Reading டேபை கிளிக் செய்யுங்கள் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த -அல்லது ஓப்பன் செய்த டாக்குமெண்டை இந்த சாப்ட்வேர் படித்துக்காண்பிக்கும். இதில் உள்ள மற்றும் ஒரு வசதி என்னவென்றால் இதில் விதவிதமான 12 ஆண்-பெண் குரல்கள் உள்ளது. உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள டாக்குமெண்டை படிக்க வைத்து அதை wav.mp3 என எந்த வகையான ஆடியோ-சிடியாகவும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.
இதனால் என்ன பலன் என்று கேட்கின்றீர்களா? மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஆடியோ சிடியாக மாற்றிக்கொண்டு ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும். இதில் உள்ள கூடுதல் வசதிகள் கீழே-
Main features
Handy notepad with speaking capabilities
Supporting DOC, PDF, RTF, HTML and text files
Recording speech into WAV, MP3 and WMA sound files
Choose one of dozens of different voices
Change voice speed and pitch in one click
Powerful bookmark system
Type & Read function
SAPI4 and SAPI5-compliant voices
Large number of visual styles
Smart Spell Checker
Efficient work with hot keys
User-friendliness and handy interface

மேலும் இதில் உள்ள Preferences மூலம் General -Editor -Reading- Spell Check வசதிகளை கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதில் பல வண்ணங்களும் இணைத்துள்ளதால் வேண்டிய வண்ணத்திற்கு இதன் முகப்பை மாற்றிக்கொள்ளலாம். Read  வசதி மூலம் நாம் தட்டச்சு செய்யும்போதே தட்டச்சு செய்தததை கேட்க்கும் வசதியும் கர்சரை எங்கு வைத்துள்ளமோ அங்கிருந்து கேட்கும் வசதியையும் இதில் கொண்டுவரலாம். 
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.நீங்கள் ஒட்டுப்போடுவதால் மற்றவர்களுக்கும் இந்த சாப்ட்வேர்பற்றி தெரிய வரும்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஆசிரியர்களுக்கு ஐடியாக்களை கொடுக்கும் இணையதளம்


கல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல வகையான ஐடியாக்கள் மற்றும் செயல் முறைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல ஒரு தளம் உள்ளது.
ஒரு கடினமான பாடத்தை எப்படி நடத்தினால் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பதில் தொடங்கி வொர்க்‌ஷீட் எப்படி உருவாக்க வேண்டும் என்பது வரை அனைத்து விதமான ஐடியாக்களையும் நமக்கு அளிப்பதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
A to Z Teacher Stuff இது தான் இணையதளத்தின் பெயர் ஆசிரியர்களுக்கு எப்படி அவர்களின் அறிவை மேலும் பட்டை தீட்டலாம் என்று சொல்லும் இத்தளத்திற்கு சென்று நாம் Word Shapes Worksheet Generator, Word Search Maker, Handwriting Worksheet Generator, Leveled Books Database, Science Experiments Teacher Tools ,Teacher Tips, Lesson Plans, Printables & Worksheets என அனைத்தும் பயன்படுத்தலாம் தேவையான பிரிண்ட் செய்த பேப்பரை தரவிறக்கம் செய்யலாம்.
ஆசிரியர்களுக்கு பாடத்தில் ஏழும் சந்தேகங்களுக்கு விடை அளிக்க பல திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளையும் எவ்வாறு திட்டமிட்டு பாடம் நடத்த வேண்டும்.
பாடத்தில் உள்ள முக்கியமானவற்றை மாணவர்கள் மனதில் பதியும்படி சொல்ல எண்னென்ன நுணுக்கங்கள் எல்லாம் உள்ளன என்பதை அழகாக பட்டியலிட்டு சொல்கிறது இத்தளம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பல முன்னனி தளங்கள் செய்திகளை உடனுக்குடன் நமது பிளாக்கிளும் வரவழைக்க


ஆம் நண்பர்களே இந்த வசதியை மிகவும் எளிமையான முறையில் நமது பிளாக்கில் வர வழைக்க முடியும். இதைத்தான் ஆங்கிலத்தில் "நியூஸ் பீட்ஸ்" என்கின்றோம் இதனை பயன்படுத்தி எந்த மொழி செய்திகளையும் நமது பிளாக்கில் உடனுக்குடன் அப்டேட் செய்யுமாறு வகைப்படுத்தலாம். தமிழர்களுக்காக சுட சுட தமிழில் உலகம், வணிகம்,தமிழ் நாடு,விளையாட்டு செய்திகளை பெற பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.
இந்த வசதியினை கூகில் "நியூஸ் ஃபீட்ஸ்" நிருவனம் நமக்கு இலவசமாக தருகின்றன இதனை நீங்கள் அப்டேட் செய்யவேண்டியதில்லை அதுவே தானாகவே பல செய்தி தளங்களின் புதிய தலைப்புச்செய்திகளை தமிழில் உங்கள் தளங்களின் பக்கங்களில் அப்டேட் செய்யும்.



1) goto blogger acount click " layout"



2) click "add gadget---->feed"






3)
தமிழ் நாட்டு செய்திகளை உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=tn&output=rss



4)உலக செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=w&output=rss



5)வணிக செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


6)விளையாட்டு செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=s&output=rss



7)சினிமா பற்றிய செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=e&output=rss

8) தினமலர்  செய்திகளை உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

 http://www.dinamalar.com/rssfeed.asp

9) விகடன் செய்திகளை உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

                                                                     PREVIEW
                                                                     
குறிப்பு(NOTE):இவை அனைத்தையும் வரவழைக்க புதிதாக அல்லது மீண்டும் 1,2 வழிமுறைகளை பின்பற்றவும்.

                                                                     PREVIEW



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்