Monday 27 August 2012

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு யூ டியூப்பில் இலவசப் பாடங்கள்!


என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு யூ-டியூப்பில் இலவசமாகப் பாடங்களைப் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது என்பிடிஎல் திட்டம். இதுகுறித்து என்ஜினீயரிங் மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக வருகிற 18ம் தேதி சென்னை ஐஐடியில் பயிலரங்கு நடைபெறுகிறது. இந்த இலவசப் பயிலரங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

சர்வதேசப் புகழ் பெற்ற பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் சேருவதற்கு அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்காது. அதற்காக நுழைவுத் தேர்வு எழுதி, அங்கு படிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே கிடைக்கும். ஆனால், ஐஐடிக்களில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களின் உரையைக் கேட்டால், நாமும் நன்கு படித்துப் பயன் பெறலாமே என்று பல மாணவர்கள் நினைக்கலாம். பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் விரிவுரைகளை வீட்டிலிருந்தே இலவசமாகக் கேட்கும் வாய்ப்பை அளிக்கிறது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம். என்பிடிஇஎல் எனப்படும் நேஷனல் புரோகிராம் ஆன் டெக்னாலஜி என்கேன்ஸ்ட் லேர்னிங் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் யூ டியூப்பில் பொறியியல் தொடர்பான பாடங்களின் விரிவுரைகளை இலவசமாகக் கேட்கலாம். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் வகுத்துள்ள பாடத்திட்டப்படி, பிரசித்தி பெற்ற பேராசிரியர்களின் விளக்க உரைகள் யூ டியூப்பில் இடம் பெற்றுள்ளன.

ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், என்விரான்மெண்டல் சயின்ஸ், கணிதம், நானோ டெக்னாலஜி, அட்மாஸ்பெரிக் சயின்ஸ், கெமிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், கெமிஸ்ட்ரி அண்ட் பயோ கெமிஸ்ட்ரி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மெட்டலர்ஜி அண்ட் மெட்டீரியல் சயின்ஸ், இயற்பியல், சிவில் என்ஜினீயரிங்,, என்ஜினீயரிங் டிசைன், மைனிங் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் போன்ற பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் கம்ப்யூட்டர் நெட் ஒர்க்ஸ், பிரின்சிபிள்ஸ் ஆஃப் புரோகிராமிங் லாங்வேஜஸ், டேட்டா ஸ்டரக்சர்ஸ் அண்ட் அலாக்ரிதம்ஸ், கம்ப்யூட்டர் நெட் ஒர்க், சாஃப்ட்வேர் என்ஜினீயரிங், டேட்டா கம்யூனிக்கேஷன், கிரிப்டோகிராபி அண்ட் நெட் ஒர்க் செக்யூரிட்டி, இன்டர்நெட் டெக்னாலஜி... இப்படி 90க்கும் மேற்பட்ட பாடங்களுக்கான விரிவுரைகள். இதுதவிர, மேனேஜ்மெண்ட், ஹியூமானிட்டிஸ் அண்ட் சோஷியல் சயின்சஸ் பாடங்களையும் யூ டியூப்பில் கேட்கலாம். ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ் போன்ற பாடங்களையும் விரைவில் கேட்கலாம். தனிப்பட்ட நபர்கள் இந்த விரிவுரைகளை கேட்க விரும்பினால் டிவிடியிலும் இந்த விரிவுரைகள் கிடைக்கின்றன. ஆனால் அதற்கு மிகக் குறைந்த கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு டிவிடிக்கும் ரூ.200 மட்டும்தான். அதாவது, ஒரு டிவிடியில் 30 முதல் 45 விரிவுரைகள் இருக்கும். தற்போது 200க்கும் மேற்பட்ட பாடங்களுக்கான உரைகளை மாணவர்கள் யூ டியூப்பில் பார்க்கலாம். இந்த எண்ணிக்கையை இந்த ஆண்டின் இறுதிக்குள் 1,200 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மாசாசூ செட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி,  ஓபன் கோர்ஸ் வேர் என்ற பெயரில் ஏராளமான பாடங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் பாட விரிவுரைகளை இன்டர்நெட் வசதியுள்ள யாரும் தங்களது தேவைக்கு ஏற்ற பாடங்களைக் கேட்டுப் பயன்பெறலாம். அதுபோன்ற முயற்சியின் தொடக்கம்தான் என்பிடிஇஎல். நாட்டில் ஏராளமான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகிறார்கள். பல கல்லூரிகளில் தரமான ஆசிரியர்கள் இருப்பதில்லை. எனவே, தரமான ஆசிரியர்களின் விரிவுரைகளை இலவசமாகப் பார்த்து, பாடங்களை நன்கு புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு இது. சாதாரண பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஐஐடி, ஐஐஎஸ்சி பேராசிரியர்களின் பாட சம்பந்தமான விரிவுரைகள் இலவசமாகக் கிடைக்கிறது என்றால் சும்மாவா? இந்தத் திட்டம் குறித்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சென்னை ஐஐடியில் ஆகஸ்ட் 18ம் தேதி காலை 9 மணியிலிருந்து 1 மணி வரை பயிலரங்கு நடைபெறுகிறது. பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்பது குறித்து ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தப் பயிலரங்கில் பங்கேற்க மாணவர்கள் தேர்ந்தடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், இந்தப் பயிலரங்குக்கு வரும்போது கல்லூரி அடையாள அட்டையையும் இ-மெயில் தகவலின் பிரிண்ட் அவுட்டையும் கொண்டு வர வேண்டும். இந்தப் பயிலரங்கில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. பங்கேற்கும் மாணவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன், மதிய உணவும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவரங்களுக்கு: http://nptel.iitm.ac.in
                                     
                                             நன்றி
                                       puthiyathalaimurai

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Wednesday 22 August 2012

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற



இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள்.அந்த கார்டை எப்படி 2gb கார்டாக என்பதை கிழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.

1. இந்த வ
ழிமுறையானது 1GB மெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.


2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது

3..இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்


http://www.mediafire.com/?842s385pe0a8mzs


4. தரவிறக்கம் செய்த மென்பொருளை ஓபன் செய்யும் போது இது போன்ற வடிவில் காட்டும்.



5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார்டைமட்டும் பயன் படுத்தவும் .

6. இப்போது உங்கள் மெமரி கார்டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட்டபடும்

7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்

8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லாம் அழிந்து
2GB மெமரி கார்டாகமாறிவிடும்

9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினியில் சொருகவும் . மெமரி கார்டின் அளவு 1912MB என்று காட்டபடும்.

குறிப்பு : இது ஒரு சில மெமரி கார்டில் மட்டுமே வேலைசெய்கின்றது.


               


                              
 நன்றி
              arun bala

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும்.

அண்மைக்காலமாக ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்ஸிஸ் ஆகியவை பல்க் எஸ்.எம்.எஸ். சேவை மூலம் ஏராளமான எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகின்றனர். இத்தகைய டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் 10 இலக்க எண்களையே பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவ
ுசெய்யாத டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் தொடர்ந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை செய்வதாக புகார் வந்தால் ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும். இப
்படியே 10 முறை அபராதம் விதிக்கப்பட்டால் அந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் செல்போன் சேவை முற்றிலுமாக துண்டிக்கபட்டுவிடும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது.

அது சரி, இந்த மாதிரி SMSகளை டிராய்க்கு எப்படி தெரியபடுத்துவது?...

ரொம்ப சிம்பிள்..
உங்களுக்கு வரும் தேவையில்லாத எஸ்.எம்.எஸ்ஐ அப்படியே 1909 என்ற எண்ணுக்கு பார்வார்டு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

Source:
http://m.timesofindia.com/PDATOI/articleshow/15344392.cms

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும்.

அண்மைக்காலமாக ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்ஸிஸ் ஆகியவை பல்க் எஸ்.எம்.எஸ். சேவை மூலம் ஏராளமான எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகின்றனர். இத்தகைய டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் 10 இலக்க எண்களையே பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவ
ுசெய்யாத டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் தொடர்ந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை செய்வதாக புகார் வந்தால் ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும். இப
்படியே 10 முறை அபராதம் விதிக்கப்பட்டால் அந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் செல்போன் சேவை முற்றிலுமாக துண்டிக்கபட்டுவிடும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது.

அது சரி, இந்த மாதிரி SMSகளை டிராய்க்கு எப்படி தெரியபடுத்துவது?...

ரொம்ப சிம்பிள்..
உங்களுக்கு வரும் தேவையில்லாத எஸ்.எம்.எஸ்ஐ அப்படியே 1909 என்ற எண்ணுக்கு பார்வார்டு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

Source:
http://m.timesofindia.com/PDATOI/articleshow/15344392.cms

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்